தோகைமலை, ஜன. 10 –

தோகைமலை அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளி வந்த டிப்பர் லாரியை குளித்தலை ஆர்.டி.ஓ பறிமுதல் செய்தார்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி பகுதியில் அனுமதியின்றி செம்மண் வெட்டிக் கடத்தப்பட்டு வருவதாக குளித்தலை ஆர்.டி.ஓவிற்கு தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில் ஆர்ச்சம்பட்டி பகுதிகளில் குளித்தலை ஆர்.டி.ஓ சக்திவேல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்சிக்கு செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை பிடித்து விசாரணை செய்தார். அந்த விசாரணையின் போது திருச்சி போதாவூர் அருகே உள்ள செவக்காடு பகுதியில் பட்டா தரிசு நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண் வெட்டியெடுத்து ஆர்ச்சம்பட்டி வழியாக திருச்சி பகுதிகளில் நடைபெறும் கட்டுமான நிறுவனங்களுக்கு செம்மண் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து குளித்தலை ஆர்.டி.ஓ. செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தோகைமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்து உரிய அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.

Leave A Reply