விழுப்புரம்:
மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால் துப்புரவு பணியாளர் ஒருவர் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அருங்குணத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் இவருடைய மனைவி சத்தியா. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இதில் சத்தியா துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் திங்களன்று 2 குழந்தைகள் மற்றும் கணவருடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சத்யா, குடும்பத்தினருடன் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் இவர்களை தடுத்து விசாரணை நடத்தினர். இதில் சத்தியாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதில் குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் துணை தலைவர் சம்பளம் கொடுக்காமல் அவரை அலைக்கழிப்பதாகவும் சத்யா புகார் கூறினார். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply