பெங்களூரு, ஜன. 08 –

பெங்களூரில் இன்று காலை மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விபத்திற்குள்ளானது.

பெங்களூரு வொயிட் பீல்டு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது , திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply