கொல்கத்தா, ஜன 07 –

ஹவுரா மாவட்டத்தில் இன்று தனியார் பேருந்து தடுப்பு சுவர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், ஜகபல்பூர் பகுதியை சேர்ந்த 70 பேர் தனியார் பேருந்து ஒன்றில் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள வழிபாட்டு தளத்திற்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். இன்று அவர்கள் ஹவுரா மாவட்டத்தை கடக்கும் போது பேருந்து எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply