நாகை, ஜன. 07 –

நாகை மாவட்ட  கோடியக்கரை அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்களையும் ஜி.பி.எஸ். கருவியையும் பறித்து சென்றனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் அம்மாவட்டத்தில் பல பகுதியை சேர்ந்த மீனவர்களும், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் 2 படகுகள் மீது மோதியதுடன் , அவர்களை தாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்த செல்போன், ஜி.பி.எஸ்.கருவி , ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்களையும் பறித்து சென்றனர். இதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் தமிழக கடலோர காவல் படையினரிடம் புகார் அளித்தனர். அச்சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

free wordpress themes

Leave A Reply