விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வங்கி ஊழியர்கள் பணிநேரம் முடிந்ததாக கூறி பணம் தர மறுத்ததால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 8 தேதியன்று பிரதமர் மோடி உயர் மதிப்புள்ள பணமான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து தற்போது வரை நாடு முழுவதிலும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மக்கள் தங்களது சம்பளப்பணத்தை எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையே வங்கி ஊழியர்கள் வங்கியின் பணி நேரம் முடிந்ததாக கூறி வங்கியை மூட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் வங்கியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொது மக்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மறுநாள் வரும்படி கூறியுள்ளனர். முன்னதாக பொது மக்கள் நடத்திய போராட்டத்தின் போது அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply