மதுக்குடிக்க பணம் தராத தாய் தந்தையின் கை கால்களை கட்டிப் போட்ட மகனைப் பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடகரை ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்துவருபவர் மணிகட்டி மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் கார்த்திக் ராஜா. மதுவிற்கு அடிமையானதால் எந்த வேலைக்கும் செல்லாமல் எந்தநேரமும் மதுவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதுகுடிக்க பணம் கேட்ட போது பெற்றோர் தரமறுத்ததால் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அவர்களது கை,கால்களை கட்டிபோட்டுள்ளார்.

தூங்கி எழுந்தவுடன் மணிகட்டி மற்றும் ஈஸ்வரி சத்தம் போட்டுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து கட்டப்பட்ட கை, கால்களை அவிழ்த்து அவர்களை மீட்டனர்.

Leave A Reply