காரைக்கால், ஜன 03 –

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான விஎம்சி சிவகுமார் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் திமுக அமைச்சரும் , சட்டசபையின் சபாநாயகராகவும் இருந்தவர் விஎம்சி சிவகுமார் . தற்போது அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை காரைக்காலில் உள்ள நீராவி என்ற இடத்தில் தான் கட்டி வரும் திருமண மண்டபத்தின் கட்டுமான பணியை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவர் மீது நாட்டு குண்டு வீசினார். இதில் நிலை குலைந்த சிவகுமாரை , அவர்கள் வெட்டி படுகொலை செய்தார். இதில் படுகாயம் அடைந்த சிவகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply