கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 12 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட பணம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

இதற்கிடையே கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு பணத்தை மாற்றி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள் அவ்வபோது அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றது.

சோதனையின் போது அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது வங்கி கணக்குகளில் முறைகேடாக 98 கோடி ரூபாய் கருப்பு பணத்தை செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கைலாஷ் சந்த் குப்தா என்ற அந்த தொழிலதிபர் போலியான மற்றும் கற்பனையான ரசீதுகள் மூலம் அவர் பணத்தை டெபாசிட் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கைலாஷின் உறவினர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply