புதுச்சேரி:
தமிழக மக்கள் நலன் காக்க மக்கள் நலக்கூட்டியக்கம் தொடர்ந்து செயல்
படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.மத்திய அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியல் அமைப்புச் சட்டபாதுகாப்பு மாநாடு புதுச்சேரி துறைமுக மைதானத்தில் புதனன்று (டிச. 28) நடைபெற்றது.

‘மாநாட்டுக்கு தலைமை தாங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடுக்கப் பட்ட தாக்குதலாகும். குறிப்பாக நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் மீதும்,தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். அனைத்து பகுதியைச்சேர்ந்த ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தையும் மீறி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ரூபாய் நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.மக்கள் நலக்கூட்டியக்கம் உருவாகும் போதே இது நீடிக்காது என பலர் வதந்தியை பரப்பினர். நாங்கள் தொடர்ந்து அப் போது ஒற்றுமையை நிலைநிறுத்தி வந்தோம். இந்த மேடையில் வைகோ இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.மோடியின் இந்த அறிவிப்பால் இந்நிலை ஏற் பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் உடனான நட்பு தொடர்ந்து வருகிறது. மோடியின் கொள்கையால் வைகோவுடனான நட்பில் விரிசல் உண்டாகி விட்டது.

தேர்தல் ஆதாயத்துக் காக மட்டும் இக்கூட்டியக்கம் அமைக்கப்படவில்லை. இந்த இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக வழிநடத்திச் செல் லும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜி.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் 90 விழுக்காடு பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். 100பேருக்கும் மேல் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். தலித்துகள், ஒடுக்கப்பட்ட, ஏழை, ஏளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் தொழிலதிபர் களான அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்றவர் கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2012-ம் ஆண்டு கறுப் புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. பொருளாதார நிபுணர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.புதுச்சேரியில் மொத்தம் உள்ள 29 ஆயிரம் கடைகளில் வெறும் 400 பேரிடம் மட்டுமே ஸ்வைப் இயந்திரம் உள்ளது. இதனால்400 பேர் தான் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மோடி அரசை எதிர்த்து கேரள மாநிலத்தில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. திர்காலத்தில் மோடி அரசின் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் நலக்கூட்டியக்கம் போராட்டம் நடத் தும். வைகோ விலகிச் சென்றாலும் மக்கள் நலக் கூட்டியக்கம் தமிழக மக்கள் நலன்காக்க உறுதியுடன் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இரா.முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் பேசியதாவது: 50 நாள்கள் கெடு முடிவடைந்த நிலையில் கறுப்புப்பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க முடிய வில்லை. ஆனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசரச் சட்டத்தின் மூலமேஆட்சியை நடத்தி வருகிறார் மோடி. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அச்சமுற்று, தொலைக்காட்சி, வானொலி, பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி வருகிறார். நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாதவராக உள்ளார் மோடி. ரூ. 13 லட்சம் கோடியை பெருமுதலாளிகளுக்கு கடனாக அளித்துள்ளார்.

மாறாக கல்விக்கடனை வசூலிக்க அடியாட்களை அனுப்பும் நிலை உள்ளது. ரூபாய்நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பால் தோல்வி அடைந்த மோடி இந்நேரம் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாநாட்டு மலர் வெளியிடபட்டது. சிபிஎம் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங் கம், சிபிஐ புதுச்சேரி மாநில செயலாளர் விசுவநாதன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் சிந் தனை செல்வன்,துரை. ரவிக்குமார், புதுச்சேரி மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் மோடி அரசின் நடவடிக்கையை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply