விருதுநகர் , டிச. 27 –

சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் திங்களன்று ஏற்பட்ட வெடி விபத்தில்  பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாராயணபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திங்களன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 4 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த வெடி விபத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply