திண்டுக்கல் மாவட்டக் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன.

இதன் இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி அணி, ஏ.சி.எல்.சி. கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பெண்கள் பிரிவில் திண்டுக்கல் விளையாட்டு விடுதி அணியும் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி அணியும் விளையாடின. இதில் திண்டுக்கல் விளையாட்டு விடுதி அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆண்கள் அணிக்கு பரிசுக் கோப்பையும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. பெண்கள் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்டக் கூடைப்பந்துக் கழகத் தலைவர் அன்சாரி, துணைத் தலைவர் தர்மலிங்கம், இணைச் செயலாளர் ரவி, மாவட்டக் கால்பந்துக் கழகச் செயலாளர் சண்முகம் ஆகியோர் வழங்கினர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.