பெங்களூரு, டிச. 26 –

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள சிலிண்டர் குடோனில் ஞாயிறன்று ஏற்பட்ட தீ விபத்தில் 900 சிலிண்டர்கள் வெடித்து சாம்பலாகின.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், சிந்தாமணி நகரில் ஹெ.பி.நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டர் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஞாயிறன்று இரவு திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 900 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களும் தீயில் கருகின. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பேட்டரி பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டது எனவும் இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.