சென்னை:

தொழில் அதிபர் சேகர் ரெட்டிவீட்டில் வருமான வரித்துறையி னர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் தங்கம், வெள்ளி, பல லட்ச ரூபாய் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேகர் ரெட்டிக்கும் ராமமோகன ராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது விசாரணை யில் தெரிய வந்தது. மணல் குவாரிகள் உள்ளிட்ட ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதனால் ராமமோகன ராவ் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். வருமான வரித் துறை சோதனைக்கு பிறகு சேகர் ரெட்டி கைதானது போல் ராமமோகனராவ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது. இதனால் சென்
னையில் ஊடகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ நீதி மன்றத்தின் முன்பு காத்திருந்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட வில்லை.

\இந்நிலையில் ராமமோகன ராவ், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தமக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கு4வது மாடியில் உள்ள அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எந்த சிறப்புமருத்துவரும் அவருக்கு சிகிச்சை அளிக்க வில்லை. வழக்கமான பணியில்ஈடுபடும் மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்தார். ராம மோகன ராவ் உடல் நன்றாக இருந்த காரணத்தால் சிறப்பு மருத்துவர்கள் யாரும் அழைக்கப் படவில்லை. இந்த தகவலை அறிந்த மத்திய உளவுத்துறையினர் மருத்துவமனையில் கண்காணிப் பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ராமமோகன ராவைப் பார்க்க வெளியில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை. அவரது உறவினர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர்.அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கைதுக்கு பயந்துமருத்துவமனையில் படுத்துக்கிடப்பதாகவும் மருத்துவமனை யில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ராமமோகன ராவ்கைது செய்யப்படுவது உறுதி என்பதால் முன் ஜாமீன் கோரிஅவர் மனு தாக்கல்செய்ய திட்டமிட்டுள்ளார். அது கிடைத்த வுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று அவருக்கு நெருக்கமாக உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.

Leave A Reply

%d bloggers like this: