போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக இளைஞர் ஒருவர் மீது முன்தேதியிட்டு நோட்டீஸ் வழங்கிய காவல்துறையினரின் நடவடிக்கை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மண்டகாப்பாளையம் பகுதியில் 18 ஆம் தேதி அன்று மூன்று இளைஞர்கள் குடி போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டியதாகவும், அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்று கூறி திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையில் 18-ஆம் தேதியே பிடிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் 20-ஆம் தேதி அதாவது இன்று பிற்பகல் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததாக காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து முன்தேதியிட்டு நோட்டீஸ் வழங்கிய காவல்துறையினரின் நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாகவும் மேலும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது

Leave A Reply