கோவா:
கோவாவில் விசாரணை என்ற பெயரில் 34 லட்சம் ரூபாயை பறித்து சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை டிஐஜி விமல் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவா மாநிலம் சலிகோ பகுதியில் இக்பால் மேனன் என்பவர் கடந்த வாரம் வங்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.34 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது சலிகோ பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் விகாஷ் நாயக், இக்பால் மேனனை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். இதில் இக்பால் மேனன்னிடம் பணம் இருப்பதை அறிந்த காவலர் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்று கூறி ரூ.34 லட்சத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்த இக்பால் மேனன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் காவலர் விகாஷ் நாயக் பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தலைமறைவாக உள்ளவரை தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  காவல் துரையினரே பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply