சென்னை:

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் விசாரித்தார்.வெள்ளியன்று (டிச.16)  மாலை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி, அவரதுமகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி முரசொலி செல்வம் ஆகியோரிடம் கலைஞர் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததாக செய்தியாளர்களிடம் கூறினார்.அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தின் மூத்தஅரசியல் தலைவர் கலைஞர், எல்லா நலமும்பெற்று மீண்டும் வந்து பணிகளை தொடங்க வேண்டும் என்றார். சவுந்தரராசனுடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.ராஜசேகரன் சென்றிருந்தார். கடந்தவாரம் காவேரி மருத்துவமனைக்கு சென்று கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் நலம் விசாரித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: