மும்பை,
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில்  3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் புறநகர் பகுதியான மேன்கர்டு பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.