சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சளித்தொல்லை காரணமாக மீண்டும் சென்னை காவேரி மருத்துவமனையில் வியாழனன்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக டிச 1 தேதியன்று ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த டிச 7 தேதியன்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: