கரூர்;

மணல் லாரி மோதி தந்தை மற்றும் மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதி மலையப்பநகரில் வசிப்பவர் நல்லதம்பி(52). இவருடைய மகன் கிருபாகரன்(22). இருவரும் வாரச்சந்தையில் கருவாடு விற்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகத்தின் அருகே திருக்காம்புலியூர் சென்ற போது மணல் லாரி இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் விபத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave A Reply