புதுதில்லி, டிச. 14 –
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்து, கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதேநேரம், இவ்வழக்கில் அனைத்துத் தரப்பினரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதனடிப்படையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த வாரம் திடீரென இவ்வழக்கில் ஆஜரான சுப்பிரமணியசாமி, புதன்கிழமை தமது 11 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.