ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் ரூ 64 லட்சம் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காவல் துறையினர் நடத்திய சோதனையில் ரூ 64 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. காவல் துறையினர் கைப்பற்றியதில் 58 லட்சம் ரூபாய் பணம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply