ஐதராபாத் , டிச. 10 –

ஐதராபாத்தில் கடந்த வியாழனன்று 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம் ஹதராபாத் நனகராம்குடா பகுதியில் 7 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த கட்டிடத்தில் ஆந்திரா மாநிலம் விலாங்கரம் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த வியாழனன்று இரவு இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு தங்கி வேலை பார்த்தவர்கள் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கினர். இதையடுத்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி பலியான 11 பேரின் சடலங்களை இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மேலும் ரேகா என்ற 35 வயது பெண்ணும் அவரது 4 வயது மகனும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமா ராவ் , இந்த கட்டிடத்தின் உரிமையாளரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இதில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் . இந்து விபத்துக்கான காரணம் குறித்து ஐதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply