தீக்கதிர்

அந்தமானில் சிக்கி தவித்த 2,367 சுற்றுல்லா பயணிகள் மீட்பு

போர்ட் பிளேர் , டிச. 10 –

அந்தமானில் சிக்கி தவித்த 2,367  சுற்றுல்லா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தீவுகளின் துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அந்தமான் தீவுகளுக்கு சுற்றுல்லா வந்திருந்த 2,367 சுற்றுல்லா பயணிகள் கடந்த டிச.5 ஆம் தேதி வடக்கு மற்றும் மத்திய அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் புயலில் சிக்கினர். இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து 7 கப்பல்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் மூலமாக அங்கு சிக்கித் தவித்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து தீவுகளின் துணைநிலை ஆளுநர் ஜெகதீஷ் முகி , கனமழை மற்றும் புயலில் சிக்கிய 12 வெளிநாட்டினர் உட்பட 2367  சுற்றுல்லா பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எந்த ஒரு அசம்பாவிதமும் உயிர் சேதம் நடக்கவில்லை என கூறினார்.