கூடலூர்,
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தர்மகிரியில் வசிக்கும் டோமியின் மனைவி லீனா. அவர் காலையில் வீட்டில் இருந்து தேவாலயத்திற்கு சென்ற போது காட்டு யானை அவரை விரட்டி உள்ளது. பயந்து ஓடிய லீனாவை யானை தூக்கி வீசியதால் பலத்த காயமடைந்தார்.

சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி லீனா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply