பாங்காக், டிச. 04 –

ஆசிய மகளிர் கோப்பைக்கான  டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காகில் ஆசிய மகளிர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் , இறுதி போட்டிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே சேர்த்தது . இதம் மூலம் 17 ரன்கள் வித்யாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆசிய மகளிர் கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.