“இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு
பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க
வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது” என்று தாம் கூறிய வார்த்தைகளால் வாழ்ந்து காட்டியவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.இவரின் வாழ்க்கை வரலாற்றையும், கவிதைகளையும் எளிய நடையில் சுருக்கமாக “ ஏவுகணை மனிதன்” எனும் தலைப்பில் நூலாக தொகுத்து வழங்கியுள்ளார் ஞா. சந்திரன்.
ஏவுகணை மனிதன் வாழ்வியலை எளிய நடையில் எல்லோரும் வாசிக்கும்
வண்ணம் சுருக்கமாக அமைத்திருப்பது அருமை. கலாமின் கவிதை மலர்களை
மாலையாகத் தொடுத்திருப்பது சிறப்பு.

ஏவுகணை மனிதன்
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் கவிதைகளும்
ஆசிரியர்: ஞா. சந்திரன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்.,41-பி,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை -600 098
பக்:60 விலை ரூ.50/-
கைபேசி: 26251968, 26258410

Leave a Reply

You must be logged in to post a comment.