சண்டிகர், நவ. 27 –
பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருந்து தப்பி சென்ற காலிஸ்தான் தீவிரவாத இயக்க தலைவரை  பிடிக்க காவலர்கள் நடத்திய வாகன சோதனையில் காவலர்களை மீறி சென்ற கார் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பலியானார்.
பஞ்சாம் மாநிலம் நபா சிறைக்குள் ஞாயிறன்று காலை நுழைந்த தீவிரவாதிகள் 10 பேர் சிறையில் தாக்குதல் நடத்திவிட்டு , சிறையில் இருந்த காலிஸ்தான் தீவிரவாத இயக்க தலைவர் ஹர்மீந்தர் சிங் மிண்டோ , குர்பிரீத் சிங், விக்கி கோந்த்ரா, நிதின் தியோ மற்றும் விக்ராம்ஜீத் சிங் ஆகியோரை தப்ப வைத்தனர்.இதையடுத்து தப்பி சென்றவர்களை பிடிக்க நபா சிறை அமைந்துள்ள சம்ராலாவில் பாதுகாப்பை பலப்படுத்தி , தீவிர வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் வாகன சோதனையின் போது, காவலர்களை மீறி கார் ஒன்று நிற்காமல்  சென்றுள்ளாது.இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் காரை ஓட்டி வந்த பெண் (24)  உயிரிழந்தார்.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.