ஹைதராபாத், நவ. 27 –

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே புதிதாக வெளியாகியுள்ள ரூ.2000 கள்ள நோட்டை அச்சடித்த 6 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

ஹைதராபாத் அருகே உள்ள இப்ராஹிம்பட்டிணம் என்னும் இடத்தில் சிலர் கள்ள நோட்டு அச்சடிப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து காவலர்கள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அங்குள்ள ஒரு வீட்டில் தற்போது புதிதாக வெளியாகி உள்ள ரூ.2000 நோட்டுகள் 2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் , ரூ.100 மற்றும் ரூ.50 உள்ளிட்ட நோட்டுகள் கிடைத்தன.பின்னர் காவலர்கள் நடத்திய ஆய்வில் அவை அனைத்து கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கள்ள நோட்டுகள், அதை தயாரிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்ததுடன் கள்ள நோட்டை அச்சடித்த 6 பேரை கைது செய்தனர். மேலும் தப்பிய 2 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Leave A Reply