எங்கெல்லாம் தீண்டாமை நிலவுகிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதியாக போராடும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.சிவகங்கை மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபையில் தலித் கிறிஸ்துவர்களுக்கு குருப்பட்டம் வழங்குவதில் பாகுபாடு நிலவுகிறது. அப்பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு முன்னணியின் புதுச்சேரி தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜி.ராமசாமி, என்.கொளஞ்சியப்பன், எம்.செலத்தையன், ஆபேல், அந்துவான், சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையில் தலித் கிறிஸ்துவர்கள் 12 ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னரும் அவர்களுக்கு குருப்பட்டம் வழங்க மறுக்கப்படுகிறது. சாதி உணர்வுடன் இவ்வாறு மறுக்கப்படுகிறது.
மைக்கேல் ராஜ் என்ற தலித் இளைஞர் 13 ஆண்டுகள் படித்து முடித்த பின்னரும் அவருக்கு குருப்பட்டம் தரப்படவில்லை.இது கிறிஸ்துவ மதத்தில் தலித்துகளை பாகுபாடாக பார்க்கக் கூடிய கொடுமையாக உள்ளது. இதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கத்தோலிக்க திருச்சபை தலித் கிறிஸ்துவர்களுக்கு குருப்பட்டம் அளிக்க வலியுறுத்தி தமிழகம்-புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. எங்கெல்லாம் தீண்டாமை நிலவுகிறதோ அங்கெல்லாம் பாரபட்சம் இல்லாமல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடி வருகிறது. அவர்களோடு மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து போராடும்.இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் நல கூட்டியக்கம்
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- வரும் டிசம்பர் 6-ம் தேதி புதுச்சேரியில் விசிக நடத்தும் மாநாட்டில் மக்கள் நலக்கூட்டியக் கத்தினர் பங்கேற்பர்.
ரூபாய் நோட்டு பிரச்சனை
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பால் நாடு முழுவதும் உளள ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படவில்லை. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட் டுள்ளன. எனவே டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக் களை பயன்படுத்த மக்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.