ஸ்ரீநகர், நவ. 25 –
ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு இராணுவ வீரர் மற்றும் 2 தீவிரவாதிகள் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இராணுவத்தினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு இராணுவ வீரர் மற்றும் 2 தீவிரவாதிகள் பலியாகினர்.
இதற்கிடையே பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர் துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.