அகர்தலா, நவ. 22 –
திரிபுராவில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் , இரண்டு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
திரிபுரா மாநிலம் பர்ஜாலா (ரிசர்வ்) மற்றும் கோவாய் தொகுதிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இருதொகுதிகளிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பர்ஜாலா (ரிசர்வ்) தொகுதியில் மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜுமு சர்க்கார் 15,769 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஷிஸ்தாமோகன் தாஸ் 12,395 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து, 3,374 வாக்குகள் வித்தியாசத்தில் ஜுமு சர்க்கார் வெற்றி பெற்றதாக அம்மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
கோவாய் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிஸ்வஜித் தத்தா 24,810 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மனோஜ் தாஸ் 16,047 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிஸ்வஜித் தத்தா 16,074 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.