கிருஷ்ணகிரி, நவ. 21 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்துவிட்டதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 36 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த திப்பாளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபால்.இவருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் சிலர் இந்த நிலத்திற்கான போலி பத்திரத்தை தயாரித்து , கோபாலிடம் நிலத்தை அவர்களுக்கு தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டனர்.இதையடுத்து தாசில்தார் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அவர் புகார் மனு அளித்தும் , அவர்கள் போலி பத்திரம் தயாரித்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த விவசாயி, தனது சகோதரர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் 32 பேருடன் வந்து தாலுகா அலுவலகம் முன்பாக தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஒசூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீக்குளிக்க முயன்ற 32 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Leave A Reply