கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கை குறித்து உங்கள் பார்வை என்ன? இந்த நடவடிக்கை எந்த நோக்கத்திற்காக இருந்தாலும், இதனால் எவ்வித பொருளாதார நியாயத்தையும் கற்பிக்கமுடியாது.
கறுப்புப்பணத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம்  இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  ஏன் அப்படி செய்கிறார்கள்? கறுப்புப் பணம் என்றால் என்ன? எந்த கரன்சி நோட்டுகளும் கருப்புப்பணம் இல்லை; அனைத்து கரன்சி நோட்டுகளும் மதிப்புடையதே. (வெள்ளைப்பணமே) கறுப்புப் பணம் என்பது செயல்முறையில் உருவாக்கப்படுகிறது. ஒரு நபர் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதபோது அது கறுப்புப்பணம் ஆகிறது. வரி செலுத்தாத வரி ஏய்ப்பு செய்பவர்களை விட்டுவிட்டு கரன்சி நோட்டுகளை செல்லாததாக அறிவித்திருப்பதால், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியாது.

அரசு இயந்திரத்தின் திறனின்மை

    ஆனால் அரசாங்கம் கள்ள நோட்டுகளை  ஒழிப்பதற்கான நடவடிக்கையாகவும் வாதிடுகின்றது? இதுகுறித்து நீங்கள் கூறுவது என்ன? நீங்கள் அரிசி ஒரு கிலோ வாங்கினால் அதிலே சில சிறிய கற்கள் இருக்கும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதில் உள்ள சிறிய கற்களை நீக்க வேண்டுமே தவிர முழு அரிசியையும் நீக்க வேண்டியதில்லை. சட்டங்களை அமலாக்க வேண்டிய அதிகாரிகள் கறுப்புப்பண நடவடிக்கைகள், வரி ஏய்ப்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு இயந்திரம் ஆகியவற்றின் திறனின்மையால் மக்கள் உழைத்துச் சம்பாதித்த சொந்த பணத்தை பெற வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதையே தெரிந்து கொள்ள முடியவில்லை. அதுகுறித்த எந்த தகவல்களும் எனக்கு தெரியாது. இத்தகைய நடவடிக்கையால் 90 சதவீதமான கரன்சி நோட்டுகளை கள்ளப்பணம் என்று எப்படி மதிப்பிட்டார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை. இதுகுறித்த தகவல்களை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதன்அடிப்படையில் கள்ள நோட்டுகள் எத்தனை மில்லியன் உள்ளன என்பதையும் மக்கள் முன் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.

பாதிப்புகளே அதிகம்; பயன்மிகக் குறைவு

    நீங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது இருந்தீர்கள். நீங்கள் பதவி வகித்த காலத்தில் அரசாங்கம் இதுபோன்ற திட்ட முன்மொழிவை முன்வைத்ததா?  ஆமாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது இது போன்ற முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டன. நாங்கள் அந்த முன்மொழிவை ஆய்வு செய்தோம். பிறகு அந்த முன்மொழிவை ரத்து செய்துவிட்டோம். இந்த முன்மொழிவு என்பது திட்டக்குழு அளவிலேயே முன்வைக்கப்பட்டது. இது ஒரு சாதாரண முன்மொழிவாகத்தானே இருந்தது?

    தற்போது மட்டும் ஏன் காரணிகளையும் விளைவுகளையும் குறைத்து மதிப்பிட்டது? இது அதிகாரப்பூர்வமாக வந்ததோ அல்லது தொலைபேசி மூலமாக வந்த உத்தரவோ  என்பது அல்ல. ஆனால் நிச்சயமாக இந்நிலை வந்திருக்கக் கூடாது. இதுபோன்ற எந்த முன்மொழிவையும் நாங்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. இந்த நடவடிக்கையால் பாதிப்புகளே அதிகம். பயன் மிகமிக குறைவே.
ஏற்கனவே இத்தகைய நடவடிக்கை வங்கி முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த இரண்டு மாதங்கள் செல்லாத கரன்சி நோட்டுகளை மாற்றுவது மட்டுமே பிரதானப் பணியாக இருக்கப் போகிறது. இதனால் வங்கியின் வணிக நடவடிக்கைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: