கோவை, தேசிய  அளவிலான இளையோருக்கான  தடகளப்  போட்டியில் தமிழக விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
கோவை நேரு மைதானத்தில் தேசிய அளவிளான தடகளப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இளையோருக்கான இந்த போட்டிகள் திங்களன்று நிறைவடைய உள்ளது. இந்நிலையில் 103 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழக வீரர்கள் தொடர்ச்சியான பதக்கங்களை வென்று வருகின்றனர். முதல் நாள் போட்டிகளில் 34 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடம் பிடித்த தமிழக அணி, இரண்டாவது நாள் போட்டிகளில் 80 புள்ளிகள் பெற்று 4 வது இடத்திற்கு முன்னேறியது. இரண்டாவது நாள் போட்டிகளில் தமிழக அணி சார்பில் டிரையத்லான் என்ற 100 மீட்டர் ஒட்டம், குண்டு ஏறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் ஈட்டி ஏறிதல்,  போல் வால்ட் போட்டிகளில் 3 வீராங்கனைகள் தங்கம் பெற்று அசத்தினர். இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது நாள் போட்டிகளில் நீளம் தாண்டுதல், 400 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஒட்டம், வட்டு ஏறிதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் தமிழக அணி 8 தங்களை வென்றது. இதன் மூலம் தமிழகத்தின் தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.நான்காவது நாளான ஞாயிறு அன்று நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தையம் மற்றும் ட்டிபிள் ஜம்ப் போட்டிகளீல்  தமிழக வீராங்கனைகள் கீர்த்திகா,ஐஸ்வர்யா ஆகியோர் தலா 4 புள்ளிகளை பெற்று  மூன்றாவது இடத்தையும், தட்டு எறிதல் போட்டியில் 2 புள்ளிகளை பெற்ற பிரியதர்சினி இரண்டாம் இட்த்தையும் பிடித்துள்ளனர். மேலும், பல்வேறு பிரிவு போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க உள்ளதால் பதங்கங்கள் மற்றும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ளதாகவும், இந்த விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தமிழக தடகள சங்கத்தலைவரும் முன்னாள் டிஜிபியுமான தேவாரம் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.