கொடைக்கானல், நவ.13 –

கொடைக்கானலுக்கு சுற்றுல்லா வந்த போது போதை காளான் சாப்பிட்ட கேரள மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு , கேரளா ஆளப்புழாவை சேர்ந்த 13 மாணவர்கள் சுற்றுலாவிற்காக வந்திருந்தனர்.தனியார் விடுதியில் தங்கிய அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போதை காளான்களை அதிகளவில் உபயோகித்தனர்.

அளவிற்கு அதிகமான போதை காளான் உட்கொண்டதில் தாமஸ் (21) மற்றும் ஜிபின் (25) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.மேலும் 3 மாணவர்கள் ஆபத்தான நிலையில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று கொடைக்கானலுக்கு சுற்றுல்லா வரும் நபர்களை அவர்கள் தங்கும் விடுதி நிர்வாகிகள் போதைக்கு அடிமையாக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.இதனால் நகராட்சி நிர்வாகமும் , கொடைக்கானல் காவல் துறையினரும் இந்த குற்றச்சாட்டிற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர்.

Leave A Reply