கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டனம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 40க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் இருக்கின்றன. இவற்றை 100 நாள் வேலைத் திட்டத்தில் மூலம் தூர் வாரும் பணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மிட்டஅள்ளி, கந்திரிபுரம், கொல்லகொட்டாய், சாப்பரம், பனகமுட்லு, பட்நூர், காரம்பட்டி, கூசினி, மோரனஅள்ளி உள்ள பல ஏரிகளில் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில் பணிகள் முறையாக நடைபெறுகிறதா? தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கப்படுகிறதா என்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு அறிவித்த கூலி ரூ. 203. ஆனால் ரூ. 80, 90 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், சட்டக் கூலி வழங்குவதாக அதிகாரிகள் கணக்கு காட்டுகிறார். எதிர்த்து கேட்டால் அந்த தொழிலாளிக்கு அடுத்த நாள் வேலைகிடையாது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு 3 மாதமாக ஊதியம் கொடுக்காமல் உள்ளனர். வேலை செய்யும் இடங்களில் குடிப்பதற்கூட தண்ணீர் இல்லை.

இந்த ஆய்வுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர்,“ முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிககை எடுக்க வேண்டும். 3 மாதமாக வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனடியாக வழங்கவேண்டும்” என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த பிரச்சனைகள் குறித்து இன்று(நவ.8)காவேரிப்பட்டனத்தில் நடைபெறும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

-ஒய். சந்திரன்

Leave A Reply