விருதுநகர், அக்.24-
சிவகாசியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி புறவழிச்சாலையில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் கடந்த வெள்ளியன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அருகில் இருந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.