இஸ்லாமாபாத், அக். 21 –
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி, கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான்கான் தொடர் போராட்டம் நடத்தினார். அப்போது பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான ‘பி.டி.வி’ அலுவலகம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், டி.வி. நிலையம் மீது தாக்குதல் நடத்திய 68 பேரையும், இம்ரான்கான், பாகிஸ்தான் அவாமி கட்சித் தலைவர் தஹிருல் காத்ரி ஆகியோரையும் கைது செய்ய நீதிபதி கவுசர் அப்பாஸ் ஹைதி உத்தரவிட்டுள்ளார்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.