மெக்சிகோ சிட்டி,அக். 18 –

மெக்சிகோ நாட்டில் 6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பல குழுக்களாக அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் மோதல்களில், குவியல் குவியலாக பிணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் முக்கிய ஆற்றில் பிணங்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக உள்ளூர் மக்கள் போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தி போதைப்பொருள் கடத்தலை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மெக்சிகோவின் 2-வது பெரிய நகரம் குவாடாலாஜாரா. இந்த நகரத்தின் புறநகர் பகுதியில் 6 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த காவலர்கள் 6 பேரும் கைகள் வெட்டப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் இறந்து கிடப்பதையும் கண்டனர்.

காவலர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் கைகள் ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநில பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான கண்காணிப்புக் குழு இவர்களை தாக்கியிருக்கலாம் என என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.