இம்பால், அக்.18-
இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட இரோம் சர்மிளா இன்று புதிய கட்சியை துவங்கி உள்ளார்.

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதற்காக கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். இரோம் கடந்த 2000–ம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார், அவரது போராட்டத்தை கைவிடச் செய்ய மணிப்பூர் போலீசார்  பல்வேறு பல முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனலிக்க வில்லை இதனால் இரோம்  மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டு குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வந்தது.
இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் மாறியது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 9ம்தேதி  இரோம் சானு சர்மிளா தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் இன்று மணிப்பூரில்  மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தனது கட்சி மணிப்பூரில் மாநில கட்சியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை தொடர்ந்து தனது கட்சி எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: