இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்…
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்…
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்…
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம்
ரயில் நிலையம்
விமான நிலையம்
மீதமிருக்கும் எல்லாவற்றையும்
தனியார் வசம் ஒப்படையுங்கள்…

காவேரி மேலாண்மை வாரியத்தை
அமைக்காமலேயே கலைத்து விடுங்கள்…
கூடங்குளத்தில்
இன்னும் இரண்டு அணு உலை வையுங்கள்…

கெயில் எரிவாயுக் குழாய்களை
விவசாய நிலத்தில் புதையுங்கள்…
எதிர்த்துக் கேட்டால்
எங்கள் விவசாயிகளையும் புதையுங்கள்…

எங்கள் குடும்ப அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
அனைத்தையும்
உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும்
உங்கள் கங்கை நதிக்கரையில்
நாங்கள்
நகரும் பிணங்களாக
அலைந்து திரிகிறோம்

– பழநிபாரதி

Leave a Reply

You must be logged in to post a comment.