சென்னை, அக். 17-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திங்களன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில்   பங்கேற்றவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசின் வஞ்சகப் போக்கைக்
கண்டித்து, விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தொடர் ரயில் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்போடு எழுச்சியாக திங்களன்று துவங்கியது. நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசனப்
பகுதியில் மக்களின் பெரும் பங்கேற்போடு மறியல் வெற்றிகரமாக நடைபெற்று வரு
கிறது. இதர மாவட்டங்களிலும் திரளான மக்கள் பங்கேற்பு இருந்தது. பங்கேற்ற அனைவ
ருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் தலைமையில் ரயில் நிலையம் முன்பு கொடிகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். தமிழக நலன் காக்கும் கோரிக்கைக
ளுக்காக குரல் கொடுத்தவர் கள் மீது மதுரை மாநகர் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் வாலிபர் சங்க நிர்வாகி சார்லஸ், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜா உசேன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல கடலூர் மாவட்டத்திலும் காவல்துறையின் தடியடி தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த அராஜகப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
ஆயிரக்கணக்கானவர்கள் மாநிலம் முழுவதும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது
நடவடிக்கைகள் மூலமோ, தடியடி மூலமோ போராட்ட உணர்வைக் குலைத்துவிட முடியாது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுவதுடன், திட்டமிட்டபடி செவ்வாயன்றும் மறியல் போராட்டம் தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவிக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.