புதுதில்லி : இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் காசநோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கவலை தெரிவித்த உலக சுகாதார மையம், உயிர்கொல்லி நோயை இந்தியா குறைத்து மதிப்பிட்டு விட்டதாக கடும் கண்டிப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகரித்துள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை இந்தியா (ஏறக்குறைய 60 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு) அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கு முன் இந்த ஆய்வு 1956-ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு சர்வதேச காசநோய்க் கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில், முந்தைய ஆண்டுகளை விட காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியா, இந்தோனேஷியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் 60 சதவீதம் புதிய காசநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தபோதிலும், காசநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.