கோயம்புத்தூர், அக். 12 –
துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடியதை முகநூலில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கோவை உக்கடத்தில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கி , கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வைத்து கடந்த பத்தாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடினார். இதனை முகநூலிலும் வெளியிட்டார். சட்ட விரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்தது குறித்து சென்னை, கோவை போன்ற இடங்களில் பல்வேறு அமைப்பினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட கோவை சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர், விசாரணையில் இத்தகவலை உறுதிப்படுத்திய சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் அனுபல்லவியின் புகாரின் பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டது (153), சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் 25(1)ஏ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.(முன்வந்த செய்தி 5ம் பக்கம்)

Leave a Reply

You must be logged in to post a comment.