சென்னை,அக்.9-
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் அதுகுறித்த கண்டுபிடிப்புடன் கூடிய தொழிலை முதல்முறையாக துவங்குவோருக்கு நிதியுதவி அளிக்கவுள்ளது.இதற்காக ரூ.30கோடியை தொகுப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் துறையில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆதரவு அளிக்கும்.
அந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் வணிகரீதியில் உற்பத்தியை தொடங்கவும் பொறியியல் உதவி உள்பட பல உதவிகள் வழங்கப்படும். புதிய கண்டுபிடிப்புகள் வணிக ரீதியாகவும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும்.ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.2கோடி வரை மானிய உதவி கிடைக்கும். இதற்காக வரும் விண்ணப்பங் கள் மற்றும் திட்டத்தை நிபுணர்கள் குழுவினர் இரண்டு கட்டங்களாக பரிசீலனை செய்வார்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: