ராயபுரம், அக். 9-
புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தாயம்மாள் (70). இவரும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த குமாரசாமி மனைவி சரோஜாவும் (50) சனிக்கிழமை மாலை வீட்டு முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென்று வீட்டின் பால்கனி இடிந்து 2 பேர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அவர்கள் அலறினார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சரோஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயம்மாளுக்கு லேசான காயங்கள் இருந்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply