சென்னை,அக். 9-
சென்னை விமான நிலையத்தை நவீன மயமாக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பொருட்டு, சுமார் ரூ.2,500 கோடிக்கு திட்ட மதிப்பீடை விமான நிலைய மேம்பாட்டு ஆணையம் தயார் செய்தது. இந்த திட்ட மதிப்பீட்டை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக விமான நிலைய மேம்பாட்டு ஆணையம் அனுப்பி வைத்தது.
இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள 2 பழைய முனையங்களை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக புதிய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதில், பல்வேறு வசதிகளும் செய்யப்படவுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: