மும்பை, அக்.3-
மகாராஷ்டி மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த  இளம் பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள தானே நகருக்கு அருகில் கோப்ரி எனும் பகுதியில் வசிப்பவர் ராக்கி செஜ்வால்(25), இவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது குழந்தைகளுடன் தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். மதியம் மாநகராட்சி தண்ணீர் பிடிக்க வேண்டி வீட்டிற்கு திரும்பிய ராக்கியின் கழுத்தில் குத்துப்பட்டு மர்மமான முறையில் இறந்துக் கிடந்துள்ளார்.

இந்நிலையில், சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ராக்கியின் குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகளின் அழுகுரல் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ராக்கியின் கணவர் ராகுல் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். ராகுல் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. ராக்கியின் தொண்டையில் சுமார் 6-7 செ.மீ வரை பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோப்ரி நகர் காவல் துறையினர், நகை, பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணையை துவங்கியுள்ளனர். ராக்கியின் சடலத்துக்கு அருகே கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: