ராஞ்சி, அக். 1 – ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கிராம மக்கள் காவலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கிராம மக்கள் 2 பேர் பலியாகினர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8,056 ஏக்கரில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க தேசிய அனல்மின் நிலையம் அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் நிலங்களை கையகப்படுத்தியது.
ஆனால் கையகப்படுத்திய நிலத்திற்கு கிராம மக்கள் கோரிய இழப்பிடு, வேலை வாய்ப்பு மற்றும் மாற்று நிலம் போன்ற எதையும் அரசு கிராம மக்களுக்கு செய்யவில்லை. இதனால் அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் நிலக்கரி சுரங்கத்திற்கான முதற்கட்ட வேலையை தொடங்கிய போது கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதில் கிராம மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே நடந்த மோதலில் கிராம மக்கள் இரண்டு பேர் பலியாகினர் மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் கிராம மக்களிடையே செப்டம்பர் 29-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை .அதனால் கிராம மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

இதை தொடர்ந்து, இன்று அதிகாலை ஜகார்காண்ட் ஹசாரிபாக் பகுதியில் கூடிய கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவலர்கள் போராட்டம் நடத்திய கிராம மக்களை தாக்கினர்.இதனால் கிராம மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து ஹசாரிபாக் துணை காவல் கண்காணிப்பாளர் சாதியோ சா , இந்த தாக்குதலில் கிராம மக்கள் 2 பேர் பலியாகினர். மேலும் கிராம மக்கள், காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஹசாரிபாக் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: